Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''குருப்-சி, குருப்-டி பணிகளுக்கு நேர்காணல் இல்லை'' பிரதமர் மோடி அறிவிப்பு

மோடி

'மத்திய அரசில் குரூப்-சி மற்றும் குரூப்-டி பணிகளுக்கு நேர்காணல் செய்யும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
நிதி ஆயோக் அமைப்பு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மையத்தில் (பிரவாசி பாரதீய கேந்திரா) ஏற்பாடு செய்திருந்த 'மாற்றத்துக்கான சாம்பியன்கள்' நிகழ்ச்சியில் இளம் தொழில்முனைவோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.  ''மென்மையான அதி அற்புதமான இந்தியா 2.0, கல்வியும் தொழில்திறன் மேம்பாடும், ஆரோக்கியமும் சத்துணவும், நீடித்த எதிர்காலத்துக்கு சக்தி உருவாக்குதல், மற்றும் டிஜிட்டல் இந்தியா, 2022ல் புதிய இந்தியா'' போன்ற தலைப்புகளில் இளம் தொழில்முனைவோர்களின் ஆறு குழுக்கள் பிரதமர் முன் தங்கள் கருத்துகளை முன்வைத்தன.
அவர்கள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ''மாற்றத்துக்கான சாம்பியன்கள்'' என்ற இந்த தூண்டுகோல் முயற்சி, நாட்டின் மற்றும் சமூகத்தின் பயனுக்காகப் பன்முக பலங்களை ஒன்று சேர்க்கும் முயற்சியாக உள்ளது. இந்த முயற்சி இயன்ற அளவுக்குச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லப்பட்டு, முறைப்படுத்தப்படும். சமூகத்தில் வெளியில் அறியப்படாத கதாநாயகர்களை அங்கீகரிக்கும் வகையில் பத்ம விருதுகளுக்கான நடைமுறைகள்  மாற்றப்பட்டன. மக்களின் மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகள் மற்றும் வழிகளை ஆராய்வதில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளனர். 
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஏராளமான சிறிய மாறுதல்கள், கணிசமான பயன்களைத் தந்துள்ளது. தாங்களே சான்றொப்பக் கையெழுத்திடலாம் என்பது சாமானிய மக்கள் மீது நம்பிக்கை வைக்கும் நடவடிக்கை ஆகும். மத்திய அரசில் குரூப்-சி மற்றும் குரூப்-டி பணிகளுக்கு நேர்காணல் செய்யும் முறையை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு எந்தவோர் இடைவெளியையும் நிரப்புவதற்கு ஒரு 'செயலி' வந்துவிட்டது. ஆட்சி நிர்வாகத்தை மாற்றி அமைப்பதில் தொழில்நுட்பமும் புதுமை சிந்தனையும் செம்மையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். கிராமப்புற பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு, பரவலாக்கப்பட்ட கட்டமைப்பு முறைகள் முக்கியம். இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில், மாற்றங்களை ஊக்குவிப்பதில் ஸ்டார்ட்அப் தொடக்க முயற்சிகளின் பயனுள்ளதாக இருக்கிறது.
சமூகத்தில் நல்ல ஆசிரியர்களின் மாற்றத்தின் ஊற்றுக்கண். அவர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் ஒரு பெரிய உந்துதலைத் தர முடியும். அரசின் சமூக நலத் திட்டங்களைத் தங்கள் ஊழியர்களிடம் பரப்புவதில் தொழில்முனைவோர் முயற்சிகள் எடுக்க வேண்டும்.. கோடிக்கணக்கான சாதாரண குடிமக்களின் முயற்சிகளால் மட்டுமே புதிய இந்தியாவை உருவாக்க முடியும். இந்த முயற்சியில் தொழில்முனைவோர்களும் கைகோர்க்க வேண்டும்'' என்று பேசினார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement