Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“அம்மா அமைத்த ஆட்சிக்கு துணை நிற்பது துரோகமா?” - கேள்வி எழுப்பும் அமைச்சர் தரப்பு

அ.தி.மு.க அணிகள்

அ.தி.மு.க மூன்று அணிகளுக்கு இடையே மோதல் க்ளைமாக்ஸை எட்டியுள்ள நிலையில், தனக்கான ஆதரவாளர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது இரு அணிகளிலும் ஸ்லீப்பர் செல்களாகச் செயல்பட்டு வருவதாகவும், தகுந்த சமயத்தில் அவர்கள் வெளிப்படுவார்கள் என்றும் தினகரன் ஒருபக்கம் கதைக்குள் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மற்ற அணிகளுக்குள் கலகம் ஏற்பட்டிருக்கும் அதே சமயம் தினகரன் அணியிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘தங்களுடைய தீவிர விசுவாசிகளாக இருப்பார்கள்’ என்று திண்டுக்கல் சீனிவாசனையும், அமைச்சர் உதயக்குமாரையும் நம்பி ஏமாந்து அவர்களது துரோகத்தால் கோபத்தில் உச்சியில் இருக்கிறார் டி.டி.வி.தினகரன். அதுபோலவே மன்னார்குடி குடும்பத்தின் மற்றொரு தரப்பான திவாகரன், கட்சியினர் மீது கோபத்தில் இருக்கிறார். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீதும், இரண்டாவது முறையாகப் பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் பவுன்ராஜ் மீதும் கடுப்பில் இருக்கிறார் திவாகரன்.

திவாகரனுக்கு ஏன் இந்தக் கோபம்? 

பவுன்ராஜ்அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம். “கடந்த சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதிக்கு கிரிதரணையும், பூம்புகார் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ நடராஜனையும்தான் வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால் பவுன்ராஜும் ஓ.எஸ்.மணியனும்தான் வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்ததாக எதிர்ப்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அவர்கள் இருவர் மீதும் கடும் குற்றச்சாட்டுகள் இருந்ததால் ஓரங்கட்டப்பட்டனர். அதிர்ந்துபோன இருவரும் உடனே எங்கள் அண்ணன் திவாகரனிடம் தஞ்சமடைந்தனர். தன்னை மதிக்கும் விசுவாசிகளை எப்போதும் கைவிடாத அண்ணன் திவாகரன், அக்கா சசிகலாவிடம் பேசி மீண்டும் இருவரையும் வேட்பாளராக்கினார்.  இருவரும் எம்.எல்.ஏ ஆனார்கள். அதில், ஓ.எஸ்.மணியனை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. பவுன்ராஜ் கான்ட்ராக்ட் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார். இந்த வாழ்வுக்கு வித்திட்ட அண்ணனை மறந்துவிட்டு இருவரும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்திருப்பது நியாயமா?” என்றார்கள். 

ஓ.எஸ்.மணியன் மற்றும் பவுன்ராஜ் ஆதரவாளர்களிடம் இதுபற்றிப் பேசியபோது, “39 எம்.பி-க்களைப் பெற்றதும், மீண்டும் மணியன்ஆட்சி அமைத்ததும் அ.தி.மு.க வரலாற்றில் ஒரு மணிமகுடம். இந்தச் சாதனைக்கு அம்மா ஒருவர்தான் காரணம். இதுபற்றி அம்மாவே (ஜெயலலிதா) வியந்து பாராட்டியிருந்தார். சாதாரணமாகச் சைக்கிளில் சென்றவர்கள் எல்லாம், இன்று ‘ஆடி’ காரிலும், சொகுசு பங்களாவிலும் வலம் வருவதற்கு அம்மாதான் காரணம். அந்த அம்மா அமைத்த ஆட்சியைத் தங்களது சுயநலத்துக்காகக் கலைப்பதற்கு நாங்கள் துணைபோக முடியுமா சொல்லுங்கள்?  அதுமட்டுமில்லை சீர்காழி அருகே புத்தூரில் அரசுக் கலைக் கல்லூரி அமைப்பது நாகை மாவட்டத்துப் பொதுமக்களின் நீண்டநாள் கனவு, வேதாரண்யத்தில் மீன்வளக் கல்லூரி கட்டுவதற்கு சூழல் அமைய 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மீன்வளக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது.

கலைக் கல்லூரிக்கான ஆயத்தங்களும் தொடங்கப்பட உள்ளன. சீர்காழியில் 88 கோடி ரூபாயில் பாதாளச் சாக்கடைத் திட்டம், மயிலாடுதுறையில் 45 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் உருவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை எல்லாம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுதான் செய்து தருகிறது. எம்.ஜி.ஆர். வழியில், அம்மா வழியில் நடைபெற்று வருகிற எடப்பாடி பழனிசாமி அரசுக்கு துணைபோவது துரோகமா? நீங்களே சொல்லுங்கள்” என்றனர்.

இரண்டு பூனைகளுக்கு அப்பத்தைப் பகிர்ந்து தர வந்த குரங்கின் கதை நினைவுக்கு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement