Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிவி நிகழ்ச்சியில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை சங்கீதா!

சங்கீதா

'தோ அந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்... இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்' என நடிகை சங்கீதா பற்றிய செய்தி அவ்வப்போது வந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, 'கண்டிப்பாக வாய்ப்பு வந்தவுடன் தெரிவிக்கிறேன்' எனக் கூறியிருந்தார். இதையடுத்து சங்கீதா டிவி நிகழ்ச்சியொன்றில் கமிட் ஆகியிருக்கிறார். 


பாலாவின் இயக்கத்தில் வெளியான 'பிதா மகன்' படத்தில் தனது தனிப்பட்ட திறமையைக் காட்டியிருந்தார். இப்படி நடிப்பில் தனக்கென தனி இடத்தைத் தக்கவைத்திருக்கும் சங்கீதா, ஏற்கெனவே 'புதுயுகம்' தொலைக்காட்சியில் 'நட்சத்திர ஜன்னல்' என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தற்போது மீண்டும் அதே 'நட்சத்திர ஜன்னல்' நிகழ்ச்சியின் சீஸன் 2-வைத் தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியானது, ஜி தமிழில் ஒளிபரப்பாகிவரும் 'வீக் எண்ட் வித் ஸ்டார்ஸ்' மற்றும் விஜய் டிவி-யில் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கிவரும் சில ஸ்டார் நிகழ்ச்சியைப்போல மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுமெனவும் தெரிவித்துள்ளார் சங்கீதா. 

சங்கீதா


இந்த மாதம் 27 ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. முதல் எபிசோடில் நடிகர் ஜீவா கலந்துகொள்ளவிருக்கிறாராம். மக்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்த பல சஸ்பென்ஸ் புதைந்திருக்கிறதாம் இந்த நிகழ்ச்சியில். 'நட்சத்திர ஜன்னல்' முதல் சீஸனில் இயக்குநர் பாலா, சிம்பு, ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ், குஷ்பு, வேதிகா போன்ற பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைப் பரபரப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement