Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாசில்லா மதுரைக்காகக் கல்லூரி மாணவிகளின் மனிதச் சங்கிலி!

பாரம்பர்ய பெருமைகொண்ட மதுரை மாநகரம் சமகாலத்தில் மாசடைந்த நகரமாக மாறி வருகிறது. இதைத் தடுக்கும் வகையிலும், சூழல் கெடாத மதுரையை உருவாக்க வேண்டுமென்ற நோக்கிலும் 'மாசில்லா மதுரை' என்ற விழிப்பு உணர்வுத் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. 

மாவட்ட நிர்வாகத்தின் எண்ணத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் டோக் பெருமாட்டி கல்லூரியைச் சேர்ந்த 1,200 மாணவிகளின் மனிதச் சங்கிலி இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் தலைமையேற்ற கலெக்டர் வீரராகவராவ் 'மாசில்லா மதுரையாக மாற்றுவதற்காகப் பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைவரும் பூமித்தாயின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்களின் பங்களிப்புடன் மாசில்லா மதுரையாக மாற்றுவதற்குப் பல்வேறு நடவடிக்கைகளாக மரக்கன்றுகள் நடுதல், வளர்த்து பாதுகாத்தல், பருவமழைக் காலங்களில் வரக்கூடிய தண்ணீரைச் சேமித்தல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்த்தல், ஊரகப்பகுதிகளைத் தூய்மையாக வைத்தல் போன்றவற்றில் நாம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

கல்லூரியிலிருந்து தொடங்கி 2 கி.மீ தூரம்வரை மாணவிகள் மனிதச் சங்கிலியாக நின்று, மாசில்லா மதுரைக் குறித்த விழிப்புஉணர்வு பதாகைகளை கழுத்தில் தொங்கவிட்டபடி நின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement