தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த சொகுசுப்பேருந்து...

உளுந்தூர்பேட்டையில் திடீரெனத் தீப்பிடித்த தனியார் பேருந்தில் பயணித்த 42 பயணிகளும் உயிர் தப்பினர்.                       

விழுப்புரம்

நேற்றிரவு, திருச்சியிலிருந்து தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று,  42 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1.15 மணியளவில், உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே வரும்போது, அந்தத் தனியார் சொகுசுப் பேருந்தின் பின்பக்கம் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாகத் தீப்பற்றி எரியத்தொடங்கியது. அதை, பின்னால் வந்த கார் ஓட்டுநர், தனியார் பேருந்தின் ஓட்டுநருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.

விழுப்புரம்

 உடனே பேருந்தை ஓரம் கட்டியிருக்கிறார் ஓட்டுநர் முருகேசன். ஆனால், அதற்குள் பேருந்து பற்றி எரியத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், பயணிகளிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். தூக்கக் கலக்கத்தில் இருந்த பயணிகள், அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். யாருக்கும் தீக்காயம் ஏற்படாமல் தப்பித்தனர் என்றபோதிலும், அவர்களின் உடைமைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து அங்கு விரைந்துவந்த உளுந்தூர்பேட்டை மற்றும் மங்கலம்பேட்டை தீயணைப்புத்துறை வீ ரர்கள், தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அந்தத் தனியார் பேருந்து முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாகக் காட்சியளித்தது. இந்தச் சம்பவம் காரணமாக விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!