தேங்காய், வாழைப்பழம் மட்டும் ஏன் கடவுளுக்குப் படைக்கிறோம் தெரியுமா?

ந்த சாமியானாலும் சரி அர்ச்சனை செய்ய வேண்டும் அல்லது பூஜை செய்ய வேண்டும் என்றால், தேங்காய், வாழைப்பழம் இல்லாமல் முடியவே முடியாது இல்லையா? சரி அது என்ன தேங்காய், வாழைப்பழம் மட்டும் பூஜையில் முக்கிய இடம் பெறுகிறது என்று நீங்கள் கேட்கலாம். வாழைப்பழம் எல்லா சீசனிலும் எல்லா ஊர்களிலும், குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது. தேங்காய், முக்கண்களைக் கொண்டிருப்பதால் ஆணவம், கன்மம், மாயைதனை உடைப்பது என்பதால்தான் தேங்காய், வாழைப்பழத்தைப் படைக்கிறோம் என்று சொல்வார்கள். ஆனால், அது மட்டும் காரணமில்லை.

வாழைப்பழம்

நாம் உண்டு முடித்தவுடன் எந்தக் காய், கனிகளின் கொட்டைகளைக் கீழே போட்டாலும், அது மீண்டும் முளைத்துவிடும் ஆற்றல் கொண்டது. ஆனால், வாழைப்பழத்தைத் தின்று தோலை வீசினாலோ, தேங்காயை தின்றுவிட்டு அதன் சிரட்டையைக் கீழே போட்டாலோ, அது மீண்டும் முளைப்பதும் இல்லை. வேர்விடுவதும் இல்லை. அதைப்போலவே, நாமும் நமது பாவங்களை எண்ணி மனம் வருந்தி வேண்டிக்கொள்ள வேண்டும். இதனால் நமது ஆன்மா தூய்மையாகித் துன்பங்கள் ஒழிந்து, மீண்டும் பிறக்காத நிலையை அடையலாம் என்பதே தேங்காய், வாழைப்பழம் நமக்கு உணர்த்தும் ரகசியம். எனவே, முன்னோர்கள் காரணம் இல்லாமல் ஒன்றும் தேங்காய் பழத்தை கடவுளுக்குப் படைக்கவில்லை என்பதை உணர்வோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!