Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காதலனைக் கரம் பிடித்தார் 'தாஜ்மஹால்' பட நாயகி!

ரெய்மா சென்

பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 'தாஜ்மஹால்' படத்தில் நடித்தவர் ரியா சென். 'சொட்டச் சொட்ட நனையுது தாஜ்மஹால்' பாடல் பலருக்கும் ஃபேவரைட். அந்தப் படத்தில் நடித்த ரியா சென்னுக்கு தற்போது வயது 36. கடந்த புதன்கிழமை அவருடைய காதலரான ஷிவம் திவாரியுடன் புனேவில் திருமணம் செய்துள்ளார். 

ரெய்மா சென்

இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்தத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. ரியா சென்னின் பாட்டி மற்றும் தாயார் இந்தி சினிமாத் துறையில் மிகவும் பிரபலமானவர்கள். ரியா சென்னும் இந்தி, பெங்காலி மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த புகைப்படத்தை ரியா சென்னும் அவரின் காதலரும் ஃபேஸ்புக்கில் நேற்று பதிவு செய்துள்ளனர். அவருடைய குடும்ப முறைப்படி திருமணம் நடந்துள்ளது. இந்தத் திருமணத்துக்கு பிரபலங்கள் பெரிதாக அழைக்கப்படவில்லை. இருவீட்டார் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement