திருச்சி மாநகராட்சியின் இணையதளம் முடக்கமா ?

திருச்சி மாநகராட்சியின் இணையதளம் முடக்கப்பட்டதாக வெளியான தகவல், பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு, திருச்சி மாநகராட்சியின் இணையதளம் http://www.trichycorporation.gov.in/, பாகிஸ்தானைச் சேர்ந்த இணையதள ஹேக்கர்களால் முடங்கியதாகப் பரபரப்புத் தகவல் வெளியானது. மேலும், திருச்சி மாநகராட்சி இணையதளத்திலிருந்து காஷ்மீர், பாகிஸ்தான் குறித்த தகவல்களைப் பதிவிட்ட வெப்சைட் ஹேக்கர்கள், அந்த இணையதளத்தில் இருந்த முக்கியத் தரவுகளைத் திருடியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, அடுத்த அரை மணி நேரத்திற்குள், திருச்சி மாநகராட்சி இணையதளம் சரி செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்திவருவதாகவும் செய்திகள் தீயாய்ப் பரவின.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சி இணையதளம் முடக்கப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆணையரிடம் கேட்க அவரை தொடர்புகொண்டோம். அவர், பிஸியாக இருப்பதாகவே தகவல் வந்தது.

தூய்மையான நகரங்கள், ஸ்மார்ட் சிட்டி என அடுத்தடுத்து மத்திய அரசின் திட்டங்கள், மத்திய அரசின் விருதுகளை பெற்றுவரும் திருச்சி மாநகராட்சியின் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியதாக வெளியான சம்பவம் பெரும்பரப்பை உண்டாக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!