அஸ்ஸாம் வெள்ளம்; காசிரங்காவில் 253 விலங்குகள் பலி!

ஸ்ஸாம் வெள்ளத்தால் காசிரங்கா வனச்சரணலாயத்தில் 253 விலங்குகள் பலியாகியுள்ளன. ஆயிரக்கணக்கான விலங்குகள் காணாமல் போயுள்ளன. 

வெள்ளத்தில் பலியான புலி

அஸ்ஸாமில் வரலாறு காணாத வெள்ளத்தால்,  25 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற காசிரங்கா வனச்சரணாலயமும் வெள்ளக்காடானது.  வெள்ளத்தில் சிக்கி 185 மான்கள், 14 காண்டாமிருகங்கள், 4 யானைகள், புலி ஒன்று உள்பட 253 விலங்குகள் இறந்துள்ளன.  பலியாகியுள்ள விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

காசிரங்கா வனச்சரணாலயத்தில் வெள்ளத்தில் சிக்கி விலங்குகள் பலியாவது வாடிக்கையாகி வருகிறது. 2012-ம் ஆண்டு 793 விலங்குகள் பலியாகின. கடந்த வருடம் 513 விலங்குகள் வெள்ளத்துக்கு இறந்தன. இந்தாண்டு 253 விலங்குகள் பலியாகியிருக்கின்றன.  வெள்ளம் ஏற்படும் காலங்களில் விலங்குகளைப்  பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர். 'விலங்கினங்களை பாதுகாப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன ' என காசிரங்கா வனச்சரணாலய இயக்குநர் சத்யந்ரே சிங் தெரிவித்துள்ளார். 

தற்போதும் காசிரங்கா வனச்சரணாலயத்தில் 30 சதவிகித பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. காணாமல்போன விலங்குகளை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!