Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தெலுங்கு 'பிக் பாஸ்' வீட்டிற்குள் சென்றிருக்கும் 'ஆடுகளம்' டாப்ஸி!

டாப்ஸி

மிழில் ஒளிபரப்பாகிவரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பிக் பாஸ் வீட்டில் தங்குவதற்காகவே நுழைவார்கள். ஆனால், தெலுங்கு 'பிக் பாஸ்', வேறு ஒரு ஃபார்முலாவைப் பயன்படுத்திவருகிறது. அதன்படி, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து, தங்கள் படங்களுக்கான புரமோஷனைச் செய்துகொள்ளலாம். அந்த வரிசையில் தற்போது, டாப்ஸி 'Anando Brahma' எனும் தெலுங்குப் படத்தில் நடித்திருப்பதால், அந்தப் படத்துக்கான புரமோஷனுக்காக உள்ளே வந்துள்ளார். 


தமிழில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட, 'ஆடுகளம்' படத்தில் அறிமுகமானவர் டாப்ஸி. இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் என்ட்ரி கொடுத்து, பிறகு மீண்டும் தமிழில் ராகவா லாரன்ஸுடன் நடித்தார். அதேநேரம், பாலிவுட் பக்கமும் கால் பதிக்கத் தவறவில்லை. பலரையும் கவர்ந்த 'பிங்க்' படத்தில் நடித்து, பாராட்டுகளை அள்ளினார். அதனைத் தொடர்ந்துதான், தற்போது தெலுங்குப் படத்தில் களமிறங்கியிருக்கிறார் டாப்ஸி.  


இந்நிலையில், தெலுங்கில் இவர் நடித்துள்ள 'Anando Brahma' என்ற படத்தின் புரொமோஷனுக்காக தெலுங்கில் நடக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். தெலுங்கு பிக் பாஸில், ஏற்கெனவே இதேபோல ராணா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement