Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு!

தி.மு.க தலைவர் கருணாநிதியை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்துள்ளார்.


தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அவருக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே கருணாநிதிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனால், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற வைர விழா மற்றும் பிறந்தநாள் விழாவில்கூட கருணாநிதி பங்கேற்கவில்லை. குறிப்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த முரசொலி பவளவிழாவிலும் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட கருணாநிதி, காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


இந்நிலையில், கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில், திருமாவளவன் சந்தித்துள்ளார். வரும் செப்டம்பர் 17-ம் தேதி நடக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாட்டு அழைப்பிதழை, கருணாநிதியிடம் திருமாவளவன் கொடுத்தார். அதேபோல, தி.மு.க பொதுச்செயலாளர் க. அன்பழகனும் கருணாநிதியைச் சந்தித்துள்ளார். கருணாநிதியின் உடல்நலம்குறித்து விசாரிப்பதற்காக, அவரை அன்பழகன் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement