வெளியிடப்பட்ட நேரம்: 21:21 (19/08/2017)

கடைசி தொடர்பு:21:21 (19/08/2017)

'ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் நடிகர்கள்': விளாசும் முத்தரசன்!

சிவகங்கையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், 'தமிழகத்தில் பிரச்னைகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், மக்கள் தன்எழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா். தமிழகத்தில், மத்திய அரசு தனது விரும்பம்போல ஆட்சி அதிகாரத்தையும் கொள்கைகளையும் அமல்படுத்தி, பலவீனப்படுத்திவருகிறது. குறுக்கு வழியில் ஆட்சியை நடத்துகிறார்கள். ஓ.பி,எஸ் முதல்வராக இருந்தபோது, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை செய்யாதது ஏன்? எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸும் மருத்துவமனையில் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக அனைவரிடமும் தெரிவித்தார்கள். இப்போது, விசாரணை என்று நாடகம் ஆடுகிறார்கள். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் நடிகர்கள். இயக்குநா் யார் என்று தெரியவில்லை.

அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பூசலோ, கொள்ளைப் பிரச்னையோ அல்ல. அவர்களுக்குள் பதவிப் பிரச்னைதான் நடக்கிறது. ஊழல் அரசு என்று கூறியவா்கள், பதவிக்கு சண்டைபோடுகிறார்கள். இணைப்பு நின்றுபோகக் காரணம், பதவிகள் டெல்லியில் தீா்மானிக்கப்படுகிறது. பதவி கிடைக்காதவா்கள் சண்டை போடுகிறார்கள். தீா்மானிக்கும் பொறுப்பு அ.தி.மு.க-விடம் இல்லை. நீட் விதிவிலக்கு மத்திய, மாநில அரசுகள்  ஆறு மாதம் நடத்திய நாடகம் முடிவுக்கு வர இருக்கிறது. ஜெயலலிதாவின் சிறுதாவூா் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் அரசுடைமையாக்க வேண்டும். மேகதாது தடுப்பணை பிரச்னையில், தமிழக மக்களுக்கு இழைத்த துரோகத்தால், மக்கள் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்டது. இந்த அரசாங்கம், ஒரு நொடிப்பொழுதுகூட தொடர்ந்து ஆட்சிசெய்ய தார்மீக பலம் கிடையாது' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க