Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது..! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

'தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். 


திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், 'பசுவுக்கு நீதி வழங்க மகனை தேர் ஏற்றிக்கொன்ற மனுநீதிச் சோழன் ஆண்ட மண் திருவாரூர். தமிழகத்தில் அதிகளவு நெல் உற்பத்தி செய்யும் மாவட்டமாக திருவாரூர் உள்ளது. திராவிடத்தால் உரமேற்றப்பட்ட மண் திருவாரூர். வலங்கைமான், அரித்துவாரமங்கலம் காவல் சரகங்கள் தஞ்சாவூரிலிருந்து திருவாரூரில் இணைக்கப்படும்.

இந்தியாவிலேயே கல்வியில் சிறந்து விளங்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. விவசாயிகள் பெருமையை பாடல்கள், திரைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். தவறைத் தட்டிக்கேட்கும் குணம்தான் எம்.ஜி.ஆரை முதல்வர் ஆக்கியது. எந்த பின்புலமும் இல்லாமல் உழைப்பால் முதலமைச்சரானவர் ஜெயலலிதா. விவசாயிகளுக்குத் தேவையான அளவு பயிர்க்கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அடிக்கடி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்ததால் தான் தமிழகத்துக்கு அதிக அளவு வீடு கட்ட அவர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது' என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement