வெளியிடப்பட்ட நேரம்: 03:10 (20/08/2017)

கடைசி தொடர்பு:10:59 (21/08/2017)

வாராக்கடன்களில் இருந்து வர்த்தக நிறுவனங்கள் பாதுகாக்கப்படும்- அருண் ஜெட்லி

மும்பையில் நடைபெற்ற திவால் சட்டம் தொடர்பான மாநாட்டில் 'வர்த்தக நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் வாராக்கடன்கள் தொடர்பான திவால் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக' மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார், 

அருண் ஜேட்லி


இந்தக் கூட்டத்தில், 'பொருளாதார சவால்களை சமாளிக்கும் வகையிலும், வாராக்கடன்களை வசூலிப்பது தொடர்பான சட்டபூர்வ நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வாராக்கடன் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் காலதாமத்தை தவிர்க்கக் கடன் வசூல் தீர்ப்பாய சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்' என்றும், 'கடன் வசூல் தொடர்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக' கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல், 'வாராக்கடன் பிரச்னைக்குத் தீர்வு காணாவிட்டால் மாநில அரசுகளின் கீழ் இயங்கி வரும் வங்கிகளின் செயல்பாடுகள் வலுவானதாக இருக்காது' என்று தெரிவித்து இருக்கிறார். 

வாராக்கடன் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கிற மல்லையா இங்கிலாந்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் வாங்கிய கடன் பெயரில் உள்ள சொத்துகளை ஏலம் எடுக்கவும் ஆட்கள் இல்லை. இந்த நிலையில் வாராக்கடன் உரிய திருத்தம் யாரைக் காப்பாற்றும் என்று தெரியவில்லை.