Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய ஐந்து நாள்கள் கால அவகாசம் நீட்டிப்பு!

ஜிஎஸ்டி என்றழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தி இருக்கிறது மத்திய அரசு. இந்த வரிமுறையில் ஒவ்வொரு மாதமும் வணிகர்களும், நிறுவனங்களும் தங்களுடைய கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். 

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி. நடைமுறைப்படுத்தி ஒரு மாதம் கடந்த நிலையில் ஆகஸ்ட் 20ம-ம் தேதிக்குள் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தது மத்திய அரசு. ஆனால், சில மாநிலங்களும், அமைப்புகளும் கேட்டுக்கொண்டதால் இன்னும் ஐந்து நாள்கள் கால அவகாசம் வழங்கி இருக்கிறது நிதி அமைச்சகம். இந்த கால அவகாசம் மூலம் ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் ஜிஎஸ்டி வரி விவரங்களை ஒவ்வொரு நிறுவனமும் தாக்கல் செய்ய வேண்டும்.

வட மாநிலங்களில் அதிக மழையின் காரணமாக பல பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஜிஎஸ்டி வரியைத் தாக்கல் செய்யக் கூடுதல் கால அவகாசம் கேட்டு இருக்கிறது. பல இடங்களில் இணையத்தள சேவை குறைபாடு காரணமாக வரி செலுத்த வர்த்தகர்கள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஐந்து நாள்கள் கால அவகாசத்தை வழங்கி இருப்பதன் மூலம் கூட்டத்தை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது மத்திய அரசு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement