Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் அமித்ஷாவுக்கு பேனர் வைத்தவர்களைத் தடுத்து நிறுத்திய ஸ்ட்ரிக்ட் போலீஸ்!

சென்னையில் இன்று காலை பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவுக்காக பேனர் வைக்க முயற்சி செய்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  

அமித் ஷா பேனர்
 

அமித்ஷா கடந்த மே மாதம் முதல் பா.ஜ.க-வை பலப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக வரும் 22-ம் தேதி இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமித்ஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க ஏற்பாடு செய்துவருகின்றனர் பா.ஜ.க தொண்டர்கள். அதைத்தொடர்ந்து நடுக்குப்பத்தில் பா.ஜ.க தொண்டர் ஒருவரின் வீட்டில் நடக்கும் கிளை கமிட்டி கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார். இந்த பயணத்தின்போது பா.ஜ.க-வின் தமிழக நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அமித்ஷா மீனவர் வீட்டில் உணவருந்த திட்டமிட்டுள்ளதாகவும் பா.ஜ.க வட்டாரங்கள் கூறி வருகின்றன. 

இந்நிலையில் சென்னையில் உள்ள நடுக்குப்பம் சர்வீஸ் சாலையில் இன்று காலை சிலர் அமித்ஷாவுக்கு பெரிய பேனர் வைக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். மேலும், அனுமதி பெறாமல் பேனர் வைக்கக் கூடாது என்று அவர்களைப் போலீஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஏற்கெனவே அப்பகுதியில் 50 மீட்டர் உயரத்துக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தி, சின்னச் சின்ன பேனர்கள் வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement