Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஸ்டாலின் ஒன்றும் சட்டம் படித்த வழக்கறிஞர் அல்ல': ஓ.பன்னீர்செல்வம் காட்டம்!

ஸ்டாலின் ஒன்றும் சட்டம் படித்த வழக்கறிஞர் அல்ல என்று விமர்சித்துப் பேசியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் .


அ.தி.மு.க-வின் இரண்டு அணிகள் இணைப்பது பற்றி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதற்காக  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்துக்கு நேற்று மாலை வந்த ஓ.பி.எஸ், அங்குள்ள தனியார் ஆலையின் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்து கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், ராஜகண்ணப்பன், மனோஜ்பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று மதியம் நெல்லை மாவட்டத்துக்கு வரும் சபாநாயகர் தனபாலை கூட்டணி இணைப்புப் பற்றி சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் ராஜபாளையத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்,''இரண்டு அணிகள் இணைவது பற்றி சுமுகமான, மகிழ்ச்சியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றவரிடம்,''வேதா இல்லத்தை சட்டப்படி நினைவில்லமாக மாற்ற முடியாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?'' என்று கேட்டதற்கு, ''ஸ்டாலின் ஒன்றும் சட்டம் படித்த வழக்கறிஞர் அல்ல'' என்று சிரித்தபடி கூறிவிட்டு கிளம்பினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement