Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அமாவாசையும், அட்டைக்கத்தியும்...': அ.தி.மு.க இணைப்பு குறித்து நமது எம்.ஜி.ஆர் விமர்சனம்!

ஜெயலலிதா மறைவில் இருந்தே அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் அதிரடி கருத்துகளை பதிவுசெய்து வருகிறது. குறிப்பாக, தமிழக அரசியலில் பி.ஜே.பி-யின் ஆதிக்கங்கள் குறித்து நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் கருத்து வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, 'காவி அடி, கழகத்தை அழி' என்று தலைப்பிட்டு வந்த கவிதை மத்திய அரசை நேரடியாகக் கடுமையாகத் தாக்கியிருந்தது. இதையடுத்து, நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

நமது எம்.ஜி.ஆர்

 


இதனிடையே, அ.தி.மு.க-வில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் விரைவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று வெளியான நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் 'மேலும் ஓர் மேலூர்' என்கின்ற தலைப்பில் இன்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது.


அதில், 'கடந்த இரு நாள்களாக அமாவாசையும், அட்டைக்கத்தியும், கட்டை பாண்டியனும், மட்டைரேயனும், நத்தை நாதனும், நரியன்னையனும், நடுங்குகின்ற நிகழ்வை நாடு  கண்டு நகைத்துக்கொண்டிருக்கிறது' என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை அமாவாசையும், அட்டைக்கத்தியும் என்று குறிப்பட்டுள்ளனர். அதேபோல, மைத்ரேயனை மட்டை ரேயன் என்றும், நத்தம் விஸ்வநாதனை நத்தை நாதன் என்றும், பொன்னையனை நரியன்னை என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement