Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“என் பிள்ளைங்க படிப்புக்காக கையேந்துறேன்.. அது தப்பா தோணல!” - வைராக்கிய ஃபாத்திமாபீ

ப்போ எனக்கு 13 வயசு இருக்கும். ஐஸ் அவுஸ் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல எட்டாவது படிச்சிக்கின்னு இருந்தேன். படிக்கிறதைவிட தோழிங்களோடு சேர்ந்து, கதை பேசுறதும் விளையாடுறதும்தான் புடிக்கும். அதுக்காகவே, தெனமும் ஸ்கூலுக்குப் போயிருவேன். என் அப்பா ஒரு குடிகாரர். குடிச்சுட்டு வந்து என்னைப் போட்டு அடிப்பாரு. அவரோட குடிப்பழக்கம்தான் என் வாழ்க்கையவே சீரழிச்சுடுச்சு” 

Study

விழிகளில் உண்டாகும் பெரும் ஏக்கமும் கோபமும் சென்னை நீலம் பாட்ஷா தர்கா பகுதியைச் சேர்ந்த ஃபாத்திமாபீயை தொடர்ந்து பேச விடாமல் தடுக்கிறது. நம்பிக்கை வார்த்தைகளோடு ஆறுதல் சொன்னதும், “போட்டோலாம் புடிச்சு போட்டுடாதீங்க” என்ற கோரிக்கையோடு மீண்டும் பேச ஆரம்பிக்கிறார். 

“என் அப்பா எந்த நேரம் எங்கே குடிச்சுட்டு விழுந்து கெடப்பாருன்னு தெரியாது. அவரை நம்பினா குடும்பத்தை ஓட்ட முடியாதுன்னு முடிவு பண்ணின என் அம்மா, தர்காவுக்குப் பக்கத்தில் குந்த ஆரம்பிச்சாங்க. தர்காவுக்கு வர்றவங்க போறவங்க காசு போட்டுட்டுப் போவாங்க. அதை வெச்சுதான் என்னையும் என் கூடப் பொறந்தவங்களையும் பாத்துக்கிட்டாங்க. அப்பவும் பள்ளிக்கூடம் போறதுக்கு எனக்கு எந்தத் தடையும் இருந்ததில்லே. ஆனா, ஒருநாள் குடிச்சுட்டு வந்து என்னை அடிச்ச அப்பா, 'போய் பிராந்தி வாங்கிட்டு வா'னு சொன்னாரு. அதைப் பார்த்த என் அம்மா 'இனியும் நீ இந்த வீட்டுலேயே இருந்தேன்னா உன் வாழ்க்கையவே இந்த மனுசன் பாழாக்கிடுவாரு'னு சொல்லி, எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. 

காலாண்டு பரிட்சைக்காகப் பாவாடை சட்டைப் போட்டுக்குன்னு பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டிருந்த நான், அரையாண்டு பரிட்சையப்போ வாயும் வயிறுமா நின்னேன். இனிமே பள்ளிக்கூடத்தை நினைச்சும் பார்க்க முடியாதுன்னு தெரிஞ்சுப்போச்சு. அழுது புலம்பவும் ஆண்டவன் நேரம் கொடுக்கலை. வருஷத்துக்கு ஒண்ணுன்னு வரிசையா 10 புள்ளைங்களைப் பெத்தேன். உடம்பு என்னத்துக்கு ஆவும்? சத்தில்லாமல் நெஞ்சு வியாதி வந்துடுச்சு. அதனால், கடைசியில் பொறந்த மூணு புள்ளைகளும், கொஞ்ச நாள்லயே செத்துப்போச்சு” என்றபோது வழிந்த கண்ணீரில் அந்தத் தாயின் வலி நிரம்பி வழிந்தது. 

ஒரு பக்கம் நோயுக்கு மருத்துவமனை, இன்னொரு பக்கம் மிச்சமிருக்கும் ஏழு புள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு என வலிகளைத் தாண்டி வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார் ஃபாத்திமாபீ. தன்னால் முடிந்த வேலைகளைச் செய்வதோடு, ரிக் ஷா ஓட்டும் கணவனுக்கும் உதவியாக இருந்திருக்கிறார். சித்தாள் வேலை, வீட்டு வேலை எனக் கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டிருந்தவருக்கு, உடல் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில், மூன்று வருடங்களுக்கு முன்பு கணவரும் விபத்தில் உயிரிழக்க துடிதுடித்துப் போனார். தன் அம்மா உட்கார்ந்திருந்த அதே தர்காவின் வாசலில் இவரும் உட்கார ஆரம்பித்திருக்கிறார். 

“என் அம்மா என்னை அப்பன்கிட்ட இருந்து காப்பாத்தறதா நினைச்சு சின்ன வயசிலேயே கட்டிக்கொடுத்து போய்ச் சேந்துட்டா. என் புருஷன் ரிக் ஷா ஓட்டினாலும், புள்ளைங்களை எப்படியாவது படிக்கவெச்சிடணும்னு ராப்பகலா உழைச்சார். ஆனா, விதி அவரை விடலை. அவரு ஆசையை நிறைவேற்ற நான் தர்காவாண்ட உட்கார்ந்து கையேந்த ஆரம்பிச்சிட்டேன். எனக்குக் கெடைக்காத படிப்பு, என் புள்ளைங்களுக்கு எப்படியாவது கிடைக்கணும்ப்பா” என்கிறார் ஃபாத்திமாபீ. 

இவருக்குக் குப்பத்தின் அக்கம்பக்கத்து மனிதர்களைத் தவிர வேறு உறவினர்கள் கிடையாது; உதவியும் கிடையாது. ஆனாலும், பிள்ளைகளைப் படிக்கவைக்கும் நோக்கத்தோடு தர்கா வாசலில் கை ஏந்தி வருகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement