Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புற்றுநோய்க்கு எதிரான போரில் சென்னை மக்கள்! #GiveABrickMarathon

ஞாயிற்றுக்கிழமை என்றாலே தூக்கம், சோம்பல் என்று கழியும் சென்னை மக்களின் பொழுது இன்று கொஞ்சம் புதுமையாக, ஒரு நல்லதொரு செயலோடு தொடங்கி இருக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு சேவை செய்யும் நோக்கத்தோடு தன்வந்தரி அறக்கட்டளை  தொடங்கவுள்ள மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு தங்களின் பங்களிப்பை நடந்தும், ஓடியும் தந்துள்ளனர்.  2700 க்கும் மேற்பட்டோர் பங்குகொண்ட " give a brick " என்னும்  மாரத்தானால் காலையில் பெசன்ட் நகர்  பரபரப்பாக இருந்தது,  மாரத்தானில் பங்கேற்ற பெரும்பாலானோர்  கல்லூரி மாணவர்கள். தாத்தா பாட்டிகளும் இருந்தது சுவாரஸ்யம்.

புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாரத்தான்.

 இன்றைய காலகட்டத்தில் யாருக்கு எப்பொழுது எந்த நோய் வருகிறது? ஏன் வருகிறது? என்றே தெரியவில்லை. அதிலும் புற்றுநோயின் தாக்கம் அதிகமாகி வருகிறது. பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் வலியும், வேதனையும் கொஞ்சம் அதிகம்தான். மார்பகங்களில் ஏற்படும் கட்டிகளைப் பெண்கள் வெளியில் சொல்லத் தயங்கி, தயங்கியே பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இன்று அந்த மனோபாவம் கொஞ்சம் மாறி இருந்தாலும் பெண்களின் கூச்சமும், தயக்கமும் முற்றிலுமாக மறைந்து போகவில்லை.  அரசாங்கமே இலவச புற்றுநோய் பரிசோதனை மையங்களை அமைத்தபோதும் அது குறித்த தெளிவும், விழிப்பு உணர்வும் மக்களிடம் இல்லை என்பதை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே போகும் புற்றுநோய் மரணங்கள் உணர்த்தும்.

இந்தியாவில் முப்பது லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வருடமும் 8 லட்சம் பேர் இந்நோய்க்கு ஆளாகிறார்கள் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. உலக அளவில் இந்தியாவில்தான் அதிக மார்பகப் புற்று நோயாளிகள் உள்ளனர். மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டும்தான் வரும் என்ற எண்ணம் இருந்தால் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். சமீபகாலமாக ஆண்களையும் அது விட்டு வைக்கவில்லை.

புற்றுநோய் பாதிப்பும் மரணங்களும் அதிகரிக்க முக்கிய காரணம் அலட்சியப்போக்கும், அறியாமையும்தான். இந்தியாவில் புற்றுநோயால் நிகழும் பாதி மரணங்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் சம்பவிக்கின்றன. 60% மக்கள் மிகவும் முதிர்ந்த நிலையிலே மருத்துவமனை பக்கமே வருகிறார்கள். 25% புற்றுநோய் முறையற்ற உணவுப் பழக்கவழக்கத்தினாலும், 5% புற்றுநோய் பரம்பரையாகவும் மற்றவை பல்வேறு சூழ்நிலைகள் காரணங்களாலும் உடலில் ஏற்படும் மாற்றங்களாலும் நிகழ்கின்றன .

புற்றுநோய்

குறிப்பாக புகைப்பிடித்தல், 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுகொள்ளுதல், தினசரி மது அருந்துதல், உடல் பருமன், உடல் உழைப்பின்மை, இளம் வயதிலே பூப்படைதல், ஒழுங்கற்ற அல்லது முறையற்ற மாதவிடாய், கருப்பைவாய் பிரச்னைகள் போன்றவை புற்றுநோய்க்கான காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன.

ஆனாலும், எதற்கும் தீர்வு இருப்பது போன்று புற்றுநோயும் குணமாகக்கூடிய ஒரு நோயே . ஆனால், போதிய விழிப்பு உணர்வும், தகுந்த சிகிச்சையும் அதற்கு அவசியம் தேவை . "வரும்முன் காப்பதே சிறந்தது" என்பது தமிழ் மருத்துவக் கொள்கை. வந்த பின்பு வருந்துவதை விட முறையான வாழ்க்கை முறையாலும், உணவுமுறையாலும் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்வது நல்லது. 

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement