Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீர் தட்டுப்பாட்டில் தவித்த சென்னைக்கு ஆறுதல் அளித்த மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால், குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

poondi lake
 

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சோழாவரம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்துதான் சென்னைக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக  சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. கடும் வெயிலினால் ஏரிகள் வறண்டு காணப்பட்டன.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் வெப்பச்சலனத்தின் காரணமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்குக் குடிநீர் வழங்கி வரும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.  ஆகஸ்டு மாத இறுதிவரை மழை தொடர்ந்தால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நிலவி வரும் தண்ணீர் தட்டுபாடு சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தின் வெதர்மேன் இன்றும் சென்னையில் மழை தொடரும் என்னும் நல்ல செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இந்த தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும். மழைநீரை சேமிக்க அரசும் மக்களும் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் சிறப்பு!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement