Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’மதுக்கடையை திறந்தே வையுங்கள்!’ - போராட்டத்தில் குதித்த மது பிரியர்கள்

ராமநாதபுரம் அருகேயுள்ள முதுனாள் கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக மதுக்கடையை திறக்க விடாமல் அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இவர்களுக்கு எதிராக மதுப்பிரியர்கள் 10க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை மூடக் கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.

மதுக்கடையை மூட கோரி போராட்டம்

ராமநாதபுரம் நகரில் இருந்த 4 மதுக்கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால் முதுனாள், இடையர்வலசை, கிருஷ்ணாநகர், நாகநாதர் நகர் ஆகிய பகுதிகளுக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த 4 கடைகளும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் அவற்றை திறக்கக் கூடாது என முதுனாள் கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனாலும் இந்த மதுக்கடைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இந்நிலையில் முதுனாளில் உள்ள மதுக்கடையால், கிழக்கு கடற்கரைச் சாலையில் குடித்துவிட்டு மதுபாட்டில்களை உடைப்பது, நடைபயிற்சி செல்வோரை கிண்டல்,கேலிசெய்து வருவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். எனவே, முதுனாள் கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கூறி  இன்று அக்கடையை  திறக்கவிடாமல் முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து ராமநாதபுரம் வட்டாட்சியர் சண்முக சுந்தரம், துணை வட்டாட்சியர் வீர ராஜா, கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமரன் மற்றும் காவல்துறையினர்  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பிரிவு அதிகாரிகள் ஆய்வுசெய்து கடையை நிரந்தர மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், வட்டாட்சியர் கடையை இப்போது திறக்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டுச் சென்றார்.

 

கோஷம் போட்ட மது பிரியர்கள்
       

இதனிடையே, அதிகாரிகள் கிராமத்து மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது அதே மதுக்கடைக்கு அருகில்  முதுனாள் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக சேர்ந்துகொண்டு மதுக்கடையை மூடக்கூடாது. திறந்தே வைத்திருக்க வேண்டும். மூடினால் போராட்டங்கள் நடத்துவோம் என்றும் கோஷங்கள் எழுப்பினார்கள். முதுனாள் கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன், கோபி, முத்துராமன், முரளி ஆகியோர் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடமும் அதிகாரிகள் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement