Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்துவோம்" - அர்ஜூன் சம்பத் பேச்சு


 

"காவல்துறை எத்தகைய அடக்குமுறையை வேண்டுமானாலும் செய்யட்டும். கண்டிப்பாக திருவல்லிக்கேணியில் காவல்துறை தடையை மீறி விநாயகர் ஊர்வலத்தை நடத்துவோம்" என்று கரூரில் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். கரூரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் நடக்க இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை பார்வையிடவும் கரூர் தோகைமலையில் மதமாற்றம் செய்யப்படுபவதாக எழுந்துள்ள விவகாரத்தை விசாரிக்கவும் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று கரூர் வந்தார். கரூர் ஈஸ்வரன் கோயிலில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,
 "தமிழகம் முழுக்க எங்க அமைப்பின் சார்பில் பல ஆயிரம் இடங்களில் விநாயகர் ஊர்வலம் நடத்த இருக்கிறோம். ஆனால், ஏதோ இந்த விழா மூலம் நாங்கள் மதக்கலவரங்களை ஏற்படுத்தப் பார்ப்பதாக காவல்துறையும், தமிழக அரசும் பிளேட்டை மாத்தப் பார்க்கிறாங்க. இந்துக்களின் ஒற்றுமையை நிலைநாட்டவே விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துகிறோம். மதக்கலவரங்களை ஏற்படுத்த அல்ல. தமிழ்நாட்டில் மசூதி, சர்ச் இருக்கும் பகுதிகளில் ஊர்வலம் நடத்த தடைன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டில் சர்ச், மசூதிகள் இல்லாத இடம் ஏது?. தமிழக அரசும், காவல்துறையும் நியாயமாக போடும் தடையை நாங்க ஏத்துக்கிறோம். அதாவது, ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாதுங்கிற தடையை நாங்க வரவேற்கிறோம். அந்த கட்டுப்பாட்டை செயல்படுத்துறோம். ஆனால், தேவையில்லாத தடைகளைப் போட்டால், நாங்க தடைகளை மீறி விநாயகர் ஊர்வலத்தை நடத்துவோம். குறிப்பா, காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்ட திருவல்லிக்கேணியில் விநாயகர் ஊர்வலத்தை தடையை மீறி நடத்த இருக்கிறோம்.

 கொங்கு மக்களை இழிவுப்படுத்து விதமாகவும், திருச்செங்கோட்டில் உள்ள திருக்கோயிலை கேவலப்படுத்தும் விதமாகவும் எழுதப்பட்ட மாதொருபாகன் நூலைத் தடை செய்யப் போராடினோம். அதன் மொழிப்பெயர்ப்பு நூலுக்கு கிடைத்த சாகித்ய அகாடமி விருதைத் தடை செய்யப் போராடினோம். அதன் அடிப்படையில், தடை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், இன்னும் ஐந்து நாள்களில் சண்டிகரில் அந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது தர இருக்கிறார்கள். சாகித்ய அகாடமி அமைப்பை கம்யூனிஸ்ட் கைப்பற்றிவிட்டது. அதனால், பிரதமர் மோடி அந்த அமைப்பை கலைத்துவிட்டு, அந்த அமைப்பில் இருந்து இடதுசாரி எழுத்தாளர்களை வெளியேற்றணும். அதோடு, அந்த நூலைத் தடை செய்யணும். அப்படி, செய்யலன்னா, பாரத பிரதமரால் தமிழக மக்களுக்கு வேறு என்ன நன்மைகள் கிடைத்துவிடப் போகிறது?. எங்களின் எதிர்ப்பை மீறி அந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கினால், அந்தப் புத்தகத்தை தமிழகம் முழுக்க கொளுத்தும் போராட்டம் நடத்துவோம்.

கரூர் மாவட்டத்தில் ஓடும் காவிரியில் மணல் அள்ள நீதிமன்றம் தற்காலிகத் தடை போட்டிருக்கிறது. அந்த தடையை நிரந்தரமா போடணும். அதேபோல், கரூர் மாவட்டம், தோகைமலை பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களை குறிவைத்து மோசடியாக மதமாற்றம் செய்யும் வேலை நடக்குது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்துக்களை ஏமாற்றி இஸ்லாமிய மதத்துக்கு மாற்றும் அந்த மோசடியை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தணும். இல்லைன்னா, கடுமையான போராட்டம் நடத்துவோம்" என்றார் அதிரடியாக. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement