Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏரியில் நச்சு நுரை...! அதிகாரிகள் நேரில் ஆஜராக பசுமைத் தீர்ப்பாயம் சம்மன்!

நச்சு நுரை

பெங்களூரு ஏரியில் தொழிற்சாலை கழிவுகளினால் உருவான நச்சு நுரை குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கர்நாடக அரசு அதிகாரிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சம்மன் அனுப்பியுள்ளது.

பெங்களூரு, பெல்லாந்தூர் ஏரியில் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள் அதிக அளவில் கலப்பதால், ஏரி முழுவதும் நச்சுத் தன்மை உடையதாக மாறியுள்ளது. இதனால் கடந்த 17-ம் தேதி நச்சு நுரை பொங்கியது. 10 அடி உயரத்துக்கு மேல் இந்த நுரை எழுந்து காற்றின் வேகத்தால் அருகிலுள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்தது. இந்த நுரையில் புற்றுநோய் ஏற்படுத்தும் நச்சுப் பொருள்கள் அதிக அளவில் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பெங்களூரில் மழை பெய்துவருவதால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இந்த நுரை அடித்துச் செல்லப்படுகிறது. இதைத் தடுக்க அதிகாரிகள் முழுவீச்சில் செயல்பட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், பெல்லாந்துார் ஏரியில், கழிவு நீர் கலக்கப்படுவது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு புகார் கொண்டுசெல்லப்பட்டது. இதனால் கழிவுகள் கலந்து, நச்சு நுரை வெளியாவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் தரும்படி கர்நாடக அரசு உயர் அதிகாரிகளுக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சம்மன் அனுப்பியுள்ளது. நாளை, கர்நாடகா மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலர், ஏரிகள் மேம்பாட்டு ஆணைய, தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆஜராகி, ஏரியைப் பற்றி விளக்கம் அளிக்க உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement