Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழையால் 22.1 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் கடற்காற்றின் திசையைப் பொறுத்து கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவ மழையின் தொடர்ச்சியாக சேலம், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சென்னை ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

சென்னையைப் பொறுத்தவரை,  கடந்த ஒரு வார காலமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் அடிக்கடி கனமழை பெய்துவருகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.  இதனால், விரைவில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னை முடிவுக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement