Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடர் மழை... குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!

தொடர் மழை காரணமாக, குற்றால அருவிகளில் குளிக்க  இரண்டாவது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குற்றாலம் ஐந்தருவி.


குற்றாலத்தில், கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் சீசன் தொடங்கியது. குற்றால மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் இரண்டு வாரங்கள் மட்டுமே நல்ல நீர் வரத்து இருந்தது. மழைப் பொழிவு போதுமான அளவு இல்லாததால், அருவிகளில் நீர் வரத்து குறைந்தது.  அதனால், சீசன் முடிந்துவிட்டதோ என சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை அரசு சார்பில் சாரல் திருவிழா கொண்டாடப்பட்டது. சாரல் திருவிழாவுக்குப் பின்னர், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நல்ல மழை பெய்ததால், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, குற்றால அருவிகளில் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையாததால், இரண்டாவது நாளாக இன்றும் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்தால், இந்தத் தடை நீக்கப்படலாம்.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement