Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமைச்சரவையில் மாற்றம்..? அவசரமாக சென்னை வருகிறார் ஆளுநர்

அ.தி.மு.க. அணிகள் இணைப்புகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார். 

ஆளுநர் வித்யாசாகர் ராவ்

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பின்னர், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்படலாம் என்றும், அவரது அணியைச் சேர்ந்த  இரண்டு பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டால், புதிய அமைச்சரவை இன்றைய தினமே பதவியேற்கும் என்றும் தெரிகிறது. அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைக்கும் விதமாக, மும்பையிலிருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை திரும்புகிறார். தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் மகாராஷ்ட்ரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தற்போது மும்பையில் இருக்கிறார். மும்பை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement