Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குற்றாலத்தில் குளிக்கத் தடை நீக்கம்! - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

 குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள போதிலும் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்த கன மழையின் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கிய அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 52 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 16 அடியிலிருந்து ஒரே நாளில்  40.35 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணையில் 33 அடி நீர் இருப்பு உள்ளது. 

வெள்ளப் பெருக்கு

அணைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. நேற்றைய நிலவரப்படி, பாபநாசம் அணைப் பகுதியில் அதிகபட்சமாக 21 மி.மீ மழை பதிவானது. சேர்வலாறு பகுதியில் 11 மி.மீ., குண்டாறு பகுதியில் 8 மி.மீ மழை பதிவானது. மழையின் காரணமாக, குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இன்றும் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவியில், பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியிலும் அனைத்துக் கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இருப்பினும், மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியின் ஓரத்தில் நின்று சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஐந்தருவியிலும் கவனத்துடன் குளிக்குமாறு எச்சரித்து, குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இரண்டாவது நாளான இன்று குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement