Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைன் வழியாக ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வை நடத்த முடிவு!

'அடுத்த ஆண்டு முதல் ஐஐ.டி ஜேஇஇ (அட்வான்ஸ்) நுழைவுத்தேர்வு ஆன்லைன் வழியாக மட்டும் மேற்கொள்ளப்படும்' என்று அறிவித்திருக்கிறது ஐ.ஐ.டி சேர்க்கைக்கான ஆலோசனைக்குழு. நேற்று சென்னை ஐ.ஐ.டி-யில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. 

ஐஐடி


ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஐஐடி - ஜேஇஇ முதன்மைத் தேர்வு எழுதுகிறார்கள். இந்தத் தேர்வை நடத்தும் மனித வளத்துறை, மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், பேப்பர்-பேனா முறையிலும் தேர்வு எழுத வாய்ப்பை வழங்கி வருகிறது. ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வை பேப்பர்-பேனா முறையில் மட்டும் எழுதி வந்தனர். 

இந்த நிலையில், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வை முழுமையாக ஆன்லைன் மூலமே நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். சென்னை ஐஐடியின் இயக்குநராகவும், சேர்க்கை குழுவின் தலைவராகவும் உள்ள பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி "நீண்டகாலமாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவது குறித்து திட்டமிட்டிருந்தோம். ஆனால், தேர்வு நடத்துவதற்கான கட்டமைப்பு வசதி இல்லாமல் இருந்ததால் நடத்த முடியவில்லை. தற்போது தேர்வு நடத்துவதற்கான கட்டமைப்பு வசதி உருவாகி இருக்கிறது. இதனடிப்படையில் 2018-ம் ஆண்டில் ஐஐடி - ஜேஇஇ (அட்வான்ஸ்) தேர்வை ஆன்லைன் வழியாக நடத்த முடிவெடுத்து இருக்கிறோம். இதன்மூலம், எளிதில் தேர்வை மதிப்பீடு செய்யவும், குறுகிய காலத்தில் தேர்வு முடிவை வெளியிடவும் முடியும்" என்று தெரிவித்து இருக்கிறார். 

கடந்த ஆண்டு 13 லட்சம் பேர் முதன்மைத் தேர்வையும், 2.2 லட்சம் பேர் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வையும் எழுதி இருக்கிறார்கள். ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும்  ஐஐடியிலும், என்ஐடியிலும் சேர முடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement