Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரையில் ஒரு கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!

மதுரையில் நடந்த வாகன சோதனையில் ஒரு கோடியே பதினான்கு லட்சம் மதிப்புள்ள பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு சட்டத்தின் மூலம், ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பழைய ரூபாய்களை மாற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குப்பின் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்குப்பின்னும் செல்லாத நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த, கடத்திய சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 


இந்த நிலையில், நேற்று இரவு மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, பைக்கில் இரண்டு இளைஞர்கள் வேகமாக வந்தனர். சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை நிறுத்தி சோதனையிட்டதில், ஒரு கோடியே பதினான்கு லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரபு, பாலாஜி என்கிற அவர்கள் இருவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள். யாருடைய பணம் இது, யாரிடம் சேர்க்க கொண்டுசென்றனர், இவர்கள் பின்னணியில் வேறு யார் உள்ளனர் என்பதைப் பற்றி அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்லாத  பழைய நோட்டுகள் பிடிபடுவது தொடர்கதையாகி வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement