Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வருக்கு எதிராக டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு சரிதானா? - நாளை தீர்ப்பு

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, மதுரையில் கடந்த 18-ம் தேதி சமூகப் பிரச்னைகள் தொடர்பான தெருமுனை விழிப்பு உணர்வு பிரசாரம் செய்தார். அப்போது, ’உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக முதல்வர் மற்றும் சில அமைச்சர்களைத் தகுதி நீக்கம்செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளேன். அது விரைவில் விசாரணைக்கு வரும். அதன்மூலம் தமிழகத்துக்கு நல்ல மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த மனு  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்தப் பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,

"ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக, தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 420-ன்படி வழக்குப்பதிவு செயப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அமைச்சர் காமராஜ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இவர்கள் மூவரையும் அவர்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து தகுதி நீக்கம் அல்லது இடைநீக்கம்செய்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக கவர்னருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவர்கள் மூவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனு, நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என நாளை தெரிவிக்கப்படும் எனக் கூறி, நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement