Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அ.தி.மு.க-வின் கடிவாளம் டெல்லியில் உள்ளது!' - சேவியர் காட்டம்

"அ.தி.மு.க-வின் கடிவாளம் டெல்லியில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளும் இணைந்து என்ன பயன்?" என்று சேவியர் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

எம்.ஜி.ஆர் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளரான சேவியர், அந்த அமைப்பின் மாவட்ட ஆலோசனை கூட்டத்துக்காக கரூருக்கு வருகை தந்தார். எம்.ஜி.ஆர் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் பெரியசாமி தலைமையில் அந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

"எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவதற்கான முழு தகுதியையும் பெற்றது ஆர்.எம்.வீ. தலைமையிலான எம்.ஜி.ஆர் கழகம்தான். வேறு யாருக்கும் அந்தத் தகுதி இல்லை. மேலும், ஆங்காங்கே மாவட்டந்தோறும் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கூலிக்கு மாரு அடிப்பதுபோல் உள்ளது. அவர்கள் நடத்தும் அந்த விழாவுக்கு எதிர்ப்புதான் வலுத்து வருகிறது. திராவிடக் கட்சிகள் என்பது தி.க-வும், தி.மு.க-வும் மட்டும்தான். எம்.ஜி.ஆர் காலத்தில் மட்டுமே அ.தி.மு.க-வில் திராவிடம் இருந்தது. ஆனால், இப்போது உள்ள அ.தி.மு.க-வில் திராவிடம் செத்துவிட்டது. இப்போது உள்ள அமைச்சர்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்து இருப்பார்களா?. எம்.ஜி.ஆருடன் அவர்களுக்கு பரிட்சயம் உண்டா?. தங்களிடம் உள்ள பணத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்று தவித்துக்கொண்டு இருக்கின்றனர். 

நாங்கள் தி.மு.க-வை நிபந்தனையின்றி ஆதரிப்போம். மேலும், அ.தி.மு.க-வின் கடிவாளம் டெல்லியில் உள்ளது. இந்தச் சூழலில், இரு அணிகளும் இணைந்து என்ன பயன்? அமைச்சர்கள் கொள்ளையடித்த பணத்தை ஏதோ செலவு செய்கிறோம்ன்னு காண்பிக்க, இப்படி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி வருகிறார்கள்" என்றார் அதிரடியாக!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement