Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினகரன் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த 4 எம்.எல்.ஏ-க்கள்!

TTV Dinakaran

டி.டி.வி.தினகரன் நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தை எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேர் புறக்கணித்துள்ளனர். இதனால் தினகரன் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அணியும் இன்று இணையப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் திடீர் நிபந்தனை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சசிகலாவைக் கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே இணைய முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், டி.டி.வி.தினகரன் அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தோப்பு வெங்கடாசலம், குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயந்தி, சோழிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. பார்த்திபன், ஸ்ரீவில்லிப்புத்தூர் சந்திரபிரபா உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏ-க்கள் வரவில்லை. சில நாள்களுக்கு முன் மேலூரில் தினகரன் ஆதரவாளர்கள் நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் 20 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். தற்போது, தினகரன் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் 16 எம்.எல்.ஏ-க்களே கலந்துகொண்டுள்ளனர். எம்.எல்.ஏ-க்களின் திடீர் புறக்கணிப்பால் தினகரன் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வீட்டில் நடக்கும் விழாவில் பங்கேற்றுள்ளதாகவும் இதனால் தினகரன் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை என்றும் தோப்பு வெங்கடாசலம் தரப்பில் கூறப்படுகிறது. மற்ற மூன்று எம்.எல்.ஏ-க்களின் புறக்கணிப்பு விவரம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement