Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வரின் பயணத் திட்டம் ’திடீர்’ ரத்து! - அணிகள் இணைப்பில் அடுத்தடுத்த சிக்கல்

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்குச் செல்வதாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயணத் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 

அதிமுக தலைமை அலுவலகம்


சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து தலைமைக்கழகம் வந்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நிபந்தனை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். சசிகலாவை நீக்குவது தொடர்பாக நடைபெற்றுவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனை காரணமாக இணைப்பு தாமதமாவதாகக் கூறப்படுகிறது. இதனால், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் செல்வதாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அவரது கான்வாய் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் செல்வதாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பயணத்திட்டமும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க. அணிகள் இணைப்பு மேலும் தாமதமாகும் என்று தெரிகிறது. முதல்வரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதால் தலைமைக் கழகத்தில் இருந்த தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து செல்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement