வாங்கிய பொருள்களின் எடையை சரி பார்த்துக்கொள்ளும் வசதி! மதுரையில் அறிமுகம்

மதுரை கலெக்டர்

பொதுமக்கள் தாங்கள் வாங்கும் உணவுப்பொருள்களின் எடை சரியாக உள்ளதா எனச் சரி பார்த்துக்கொள்ள எடை சரிபார்க்கும் மையத்தை மதுரை மாட்டுத்தாவணி தினசரி சந்தையில்  மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் திறந்துவைத்தார்.

காய்கறி,பழங்கள் உள்ளிட்ட உணவு பொருள்கள் வாங்கும் போது அதன் எடை குறைவாக உள்ளது என மதுரையில் தொடர்ச்சியாகப் புகார் எழுந்துவந்தது. அதைத்  தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் கலெக்டர் ஆய்வு செய்து எடை இயந்திரத்தில் மூலம் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து இயந்திரத்தைப் பறிமுதல் செய்துவந்தார். மேலும் செல்போன் ஆப் மூலம் புகார்களைப் பெற்று கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் தாங்கள் வாங்கும் உணவுப் பொருள்களை மக்களே சரிப் பார்த்துக்கொள்ளும் வகையில் எடை சரி பார்த்துக்கொள்ளும் மையத்தை மதுரையில் தொடங்கி வைத்துள்ளனர். இந்தப் புதிய சேவை தமிழ்நாட்டில் மதுரையில்தான் முதல் முறையாகக் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் மதுரை மாவட்டத்தில் சந்தைகள் , பேருந்துநிலையங்கள் எனப் பல இடங்களில் இந்தச் சேவை கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் ஆய்வாளர் சாந்தி உள்ளிட்டோர்கள் கலந்துகொண்டனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!