'ஜெயலலிதாவின் ஆன்மாவால் இணைப்பு நடந்தது' பன்னீர்செல்வம் பேச்சு! | Panneerselvam speaks in Aiadmk merger fuction

வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (21/08/2017)

கடைசி தொடர்பு:11:12 (22/08/2017)

'ஜெயலலிதாவின் ஆன்மாவால் இணைப்பு நடந்தது' பன்னீர்செல்வம் பேச்சு!

 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக சிதறிக் கிடந்தது. இதனிடையே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்தது. இதையடுத்து, ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அணிகள் இன்று இணைந்தன. இதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் பன்னீர்செல்வம் சென்றார். அங்கு ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் ஒன்றாக கைகுலுக்கிக் கொண்டனர்.

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

இதைத்தொடர்ந்து பேசிய பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க அசைக்க முடியாத எஃகு கோட்டையாக இருக்கும். அதை யாராலும் அசைக்க முடியாது. இரு அணிகளுக்கு இடையேயும் கடந்த சில மாதங்களாகக் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், தற்போது அந்தக் கருத்து வேறுபாடுகள் நீங்கிவிட்டன. இனி எங்களை யாராலும் பிரிக்க முடியாது. என் மனதில் இருந்த பாரம் தற்போது அகன்று விட்டது. நாம் அனைவரும் ஜெயலலிதாவின் ஒரு தாய் பிள்ளைகள். அம்மாவின் ஆன்மா ஒரு நல்ல சூழ்நிலையை தற்போது உருவாக்கிக் கொடுத்துள்ளது. இணைப்பு நடக்கக் காரணமாக இருந்த தமிழக முதல்வர் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி. எதிர்க்கும் கட்சிகளை எதிர்கொள்ள இந்த இணைப்பு வரலாற்று பாடமாக விளங்கும்' என்றார்.