யார் யாருக்கு அமைச்சர் பதவி! - பட்டியலை வெளியிட்ட ஆளுநர் மாளிகை

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பிரிந்த அணிகள் தற்போது இணைந்தன. எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கைகுலுக்கினர். அணிகள் இணைந்ததை அதிமுக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆளுநர் மாளிகை புதிய அமைச்சரவை குறித்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

rajbhavan press release
 

*அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.  

*அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
 புதிய அமைச்சரவையில் பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
* கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கீடு

*தமிழ் வளர்ச்சித்துறை, தொல்லியல் துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் நியமனம்.

*சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூடுதலாக சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை பொறுப்பை கவனிப்பார்.

*பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

*ஜெயக்குமார் - மீன் வளத்துறை

*ஓபிஎஸ் (துணை முதல்வர்) - நிதித்துறை, வீட்டு மற்றும் நகர்புற வளர்ச்சி துறை

*செங்கோட்டையன் - பள்ளி கல்வித்துறை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!