சசிகலாவைப் பதவியிலிருந்து நீக்கக் கூடுகிறது பொதுக்குழு - வைத்திலிங்கம் அறிவிப்பு! | General body meet to be happen to remove Sasikala from Aiadmk general secretary

வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (21/08/2017)

கடைசி தொடர்பு:16:28 (21/08/2017)

சசிகலாவைப் பதவியிலிருந்து நீக்கக் கூடுகிறது பொதுக்குழு - வைத்திலிங்கம் அறிவிப்பு!

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக விரைவில் அ.தி.மு.க பொதுக்குழு கூட உள்ளதாக வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

சசிகலா

கடந்த ஆறு மாதங்களாக மல்லுக்கட்டிவந்த அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து விட்டன  பன்னீர்செல்வம் அ.தி.மு.வின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல, அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். பன்னீர்செல்வம் மற்றும் மாஃபா. பாண்டியராஜன் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

அணிகள் இணைப்புக்கு, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியைவிட்டு நீக்கவேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி நிபந்தனை வைத்தது. இரு அணிகள் இணைந்துள்ள இன்றே சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று கூறப்பட்டது.  இதையடுத்து, கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள சசிகலா அந்தப் பதவியில் நீக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு ஒரு அவசரப் பொதுக்குழு கூட உள்ளதாகவும், அந்தக் குழுவில் சசிகலா பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி-யுமான வைத்திலிங்கம் கூறியுள்ளார்.