வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (21/08/2017)

கடைசி தொடர்பு:17:20 (21/08/2017)

நாமம் போட்டு பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள்!

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆறாவது நாளான இன்று மதுரையில்  நாமம் போட்டு பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினார்கள். 

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கடந்த16-ம் தேதி தொடங்கினர். தங்களுடைய நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து லட்சக்கணக்கான கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை அஞ்சலகம்

மதுரைக் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரிலுள்ள அஞ்சலக வாயிலில் இன்று நடந்த போராட்டத்தில் திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரை செய்ததை உடனே அமல்படுத்தவும், கிராமிய ஊழியர்களுக்கு எட்டு மணி நேர வேலை வழங்கி பணி நிரந்தரப்படுத்தவும், மத்திய நிர்வாக தீர்ப்பாயமும் சென்னை நிர்வாகத் தீர்ப்பாயமும் வழங்கிய தீர்ப்பின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஆறாம் நாளை அடைந்தும் மத்திய அரசு இவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க