Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய அளவில் இன்றைய ட்ரெண்ட்டில் கலக்கும் அ.தி.மு.க இணைப்பு!

அ.தி.மு.க அணிகள் இணைப்பு விஷயம்தான், இந்தியா முழுவதும் இன்றைய ஹாட் டாபிக். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் தற்போது இணைந்திருக்கின்றன. மாலையில் அ.தி.மு.க அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதுகுறித்த அப்டேட்களால் சோஷியல் மீடியாக்கள் களைகட்டியிருக்கின்றன.

கோபிசெட்டிப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்று காலை பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இரு அணிகள் இன்று மாலைக்குள் இணையும் எனப் பேசியிருந்தார். இதனால் கூகுள் இந்தியா ட்ரெண்ட்டில் K.A.Sengottaiyan மற்றும் ‪All India Anna Dravida Munnetra Kazhagam ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், விதிமுறைகளை மீறி சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டதாகச் சமீபத்தில் டி.ஐ.ஜி ரூபா பகிரங்கக் குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் புதிய வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து, சசிகலாவின் பெயர் ட்ரெண்ட்டில் இடம்பெற்றிருக்கிறது. ட்விட்டர் இந்தியா ட்ரெண்ட்டில் #AIADMKMerger மற்றும் Sasikala போன்ற ஹேஷ்டேக்குகள் இடம்பெற்றுள்ளன. ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரை V.K. Sasikala ட்ரெண்ட்டில் இடம்பெற்றுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement