Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தூக்கில் தொங்க அனுமதிக்க வேண்டும்!' - சாலையில் உருண்ட இளைஞர்

.தற்கொலைக்கு அனுமதி வேண்டும்

''திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் இயங்கிவருகிறது தேவாங்கர் கல்வி நிறுவனங்கள். குறிப்பிட்ட சமுதாய மக்களுக்குச் சொந்தமான இந்தக் கல்வி நிறுவனங்களை ஒருசிலர் மட்டும் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள். அதில் ஆறு கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஒன்று நடவடிக்கை எடுங்கள். இல்லையேல் என்னை தற்கொலை செய்துக்கொள்ள அனுமதியுங்கள்'' என்ற கோரிக்கையுடன், சின்னாளபட்டியைச் சேர்ந்த பிச்சைமுத்து, சாலையில் உருண்டுகொண்டே வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து நம்மிடம் பேசிய பிச்சைமுத்து, ‘‘சின்னாளபட்டியில தேவாங்கர் சமூக மக்கள் அதிகமா வசிக்கிறோம். நெசவு நெய்றதுதான் எங்க தொழில். எங்க புள்ளகுட்டிகளெல்லாம் படிக்கறதுக்காக எங்க சமூகத்துல இருக்க அத்தனை பேரும் காசுப் போட்டு, தேவாங்கர் பள்ளிக்கூடத்தை ஆரம்பிச்சோம். இன்னிக்கு மேல்நிலைப்பள்ளி வரைக்கும் சிறப்பா செயல்படுது பள்ளி. ஆனால், இந்தப் பள்ளிக்கூடத்தை நிர்வாகிகள்ங்கிற பேர்ல சிலபேரு மட்டும் ஆக்கிரமிக்கப் பாக்குறாங்க. இதுத்தொடர்பா கேட்டப்ப, ஏற்கெனவே ஒரு தடவை அடிதடியாகிப் போச்சு. ஒருவழியா பேச்சுவார்த்தைக்குப் பிறகு, எங்க மக்கள் 1,463 பேரையும் பள்ளிக்கூட நிர்வாக கமிட்டியில இணைக்கிறதா சொன்னாங்க. அதைக்கேட்டு நாங்களும் அமைதியா இருந்தோம். ஆனா, அவங்க பேருக்கு சிலபேரை மட்டும் சேர்த்துட்டு மத்தவங்களை சேர்க்காம விட்டுட்டாங்க. நான் சங்கத்துல இளைஞர் அணியில பொறுப்புல இருந்ததால அங்க நடக்குற அக்கிரமங்களைத் தட்டிக்கேட்டேன். அதுக்காக எனக்குக் கொலைமிரட்டல் வந்துச்சு. இது தொடர்பா, எஸ்.பி ஆபீஸ்ல புகார் கொடுத்தும் இதுவரைக்கும் நடவடிக்கை இல்லை.

இதுக்கு இடையில, நிர்வாகத்துல இருக்க சிலர், ஆறு கோடி ரூபாய் வரைக்கும் ஊழல் பண்ணியிருக்காங்கனு தெரிஞ்சிகிட்டோம். இதை விசாரணை செஞ்சி, ஊழல் செஞ்ச பணத்தை மீட்டுக்கொடுக்கணும், சங்கத்துக்கு ஜனநாயக முறையில தேர்தலை நடத்திக்கொடுக்கணும்னு பலமுறை புகார் கொடுத்திருக்கோம். ஆனா, எல்லாமே கிணத்துலப் போட்டா கல்லாப்போச்சு. அதுனாலதான், ஒன்னு சட்டப்படி நடவடிக்கை எடுத்து, ஜனநாயக முறையில தேர்தலை நடத்திக் கொடுங்க. இல்லையின்னா, பள்ளி வாசல்ல தூக்குல தொங்கி தற்கொலை செஞ்சிக்க எனக்கு அனுமதி கொடுங்கன்னு கலெக்டர்கிட்ட மனுகொடுத்திருக்கேன். அவரும் உடனடியா விசாரிக்க சொல்றேன்னு உறுதிகொடுத்திருக்காரு’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement