இன்றைய நிகழ்வும், தோழர் ஜீவாவின் பிறந்த நாளும்!

சுதந்திரப் போராட்ட வீரராகப் பொதுவுடமைவாதியாகச் சிறந்த போராளியாகக் கனல் தெறிக்கும் பேச்சாளராகத் திகழ்ந்த தோழர் ஜீவாவின் 110 வது பிறந்த நாள் இன்று. குமரி மண் தமிழகத்துக்குத் தந்த அற்புதமான மனிதர். இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கிடையே தோழரின் பெருமை பற்றி சொல்லவும் விவரிக்கவும் வார்த்தைகளே இல்லை. ஜீவானந்தத்தின் பிறந்த தினத்தில் ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் நினைவுகூர வேண்டியது இருக்கிறது. ஜீவானந்தம் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தாலும் காமராஜருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். 

தோழர் ஜீவானந்தம்

எளிமையான ஜீவானந்தத்தை காமராஜருக்கு மிகவும் பிடிக்கும். சென்னையில் தாம்பரத்தில்தான் தன் இறுதி காலம் வரை ஜீவானந்தம் வசித்தார். தாம்பரம் இந்தளவுக்கு வளர்ச்ச்சி பெற்றதற்கு ஜீவா எடுத்த முயற்சிகளே காரணம். ஒரு முறை, தாம்பரத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க, அப்போதையை முதல்வர் காமராஜர் சென்றிருந்தார். ஜீவாவின் வீடு அருகில்தான் என்பதை தெரிந்து அவரைக் காண சென்றார் காமராஜர். 

பாட்டாளிகளுடன் பாட்டாளியாக ஜீவாவின் குடிசை வீடும் இருந்தது. அதிர்ந்து போனார் கர்மவீரர். தன்னைவிட எளிமையான ஜீவானந்தத்தை நினைத்து வியந்தும்போனார். கோட்டைத் திரும்பிய காமராஜர், ஜீவாவுக்கு சுதந்திரப் போராட்ட வீரர் ஒதுக்கீட்டில் அரசு வீடு வழங்க உத்தரவிட்டார். அதைக்கூட வாங்க மறுத்துவிட்டார் ஜீவா.

எத்தகைய மாமனிதர்கள் வாழ்ந்த தமிழகத்தில் இன்று எதை எதையோ 'வரலாற்று நிகழ்வுகள்' என இந்த அரசியல்வாதிகள் கூறிக் கொண்டுத் திரிகின்றனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!