Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வானம் பார்த்த கரூருக்கு, வந்து சேர்ந்த மழை!

கரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மழை வரத்து மிகவும் குறைவு. எனவே, அங்கு விளைச்சலும் மிகக் குறைவாகவே இருந்தது. விரக்தியில் இருந்த விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த இரண்டு வாரங்களாக கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

ஆடி பட்டம்

 

முன்பெல்லாம் தமிழக ஆறுகள் ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து ஓடும். இந்தக் காலகட்டத்தில் உழவர்கள் பட்டம் பார்த்து விதை விதைப்பது வழக்கம். ’ஆடிப் பட்டத்தில் விதைத்தால் கார்த்திகை முதலுக்கு அறுவடை செய்யலாம்’ என்பது இவர்களின் அசைக்க முடியா நம்பிக்கை. அதற்கேற்ப கரூர் மாவட்டம், மேலப்பகுதி கிராமமான விராலிப்பட்டியில் இந்த ஆண்டின் ஆடிப் பட்டத்தை வரவேற்கும் விதமாக மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் அந்த கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் விதைக்கத் தொடங்கியுள்ளனர். 

ஆடி பட்டம்
 


கம்பு, சோளம், எள்ளு, கடலை, கொள்ளு, நெல்லு எனப் பலவகையான உணவு தானிய வகைகளை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நான்கு வருடங்களாக புதை மண்டிய விலை நிலங்களைச் சுத்தம் செய்து, உழுது, பயிர்களைப் பாதுகாக்கும் வகையில் வேலிகள் அடைத்து, விதை விதைக்கத் தொடங்கியுள்ளனர். அங்கு உழுது கொண்டு இருந்த முருகேஷ் நம்மிடம் பேசுகையில் ”வானம் பார்த்த பூமியில இப்பதான் மழை வந்திருக்கு. இதே மாதிரி மழை பெய்தா கரூர் மாவட்டத்துக்குத் தானிய உற்பத்திக்குப் பஞ்சமில்லாம இருக்கும்” என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement