Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அணிகள் இணைப்பைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய பன்னீர்செல்வம் தரப்பு!

தேனி மாவட்டத்தில் பன்னீர்செல்வம் எடப்பாடி அணியினர் இணைந்ததை, பன்னீர்செல்வம் தரப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். முதல்வர் எடப்பாடி பழனிசமி அணியுடன் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக இரு அணிகளும் இணைந்திருக்கின்றன.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பன்னீர்செல்வம் தரப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை பன்னீர்செல்வத்தைவிட, தினகரன் அணியில் இருக்கும் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன்தான் பலமாக இருக்கிறார். காரணம், பெரியகுளம், கம்பம் தொகுதி எம்.எல்.ஏ-க்கள் தற்போது தினகரன் அணியில் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த அணிகள் இணைப்பு தேனி மாவட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தினகரன் அணிக்கு தாவியபோதும் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து தங்கத்தமிழ்ச்செல்வன் நீக்கப்படவில்லை. தற்போது அவர் அப்பதவியில் நீடிப்பாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அப்படி தங்கத்தமிழ்ச்செல்வனிடம் இருந்து பதவி பறிக்கப்படும்போது, தேனியில் மீண்டும் பன்னீர்செல்வம் தன்னை முன்னிறுத்துவார்.

இந்நிலையில், தினகரன் மதுரையில் நடத்திய பொதுக்கூட்டத்தைவிட அதிகமான பேரை வரும் 29-ம் தேதி தேனியில் திரட்ட தங்கத்தமிழ்செல்வனும் தினகரனும் திட்டமிட்டிருந்தனர். தற்போது இரு அணிகளின் இணைப்பு, அப்பொதுக்கூட்டம் நடைபெறுமா ஏன்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தேனியை முழுமையாக நம்பியிருந்த தினகரன், அடுத்ததாக என்ன செய்ய இருக்கிறார்? அவரை நம்பியிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதே தேனி மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கம்பம், போடி என பல இடங்களில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement