Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிகழும் அரசியல் சூழலில் புதிய மாரியப்பன்களை மறந்துவிட வேண்டாம் !

குள்ளமான மனிதர்களின் உயரமான சாதனை இது. பதக்கப்பட்டியலில் தங்கத்தைக் குவித்து தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி வீரர்களை அரசு மறந்துவிட வேண்டாம்.

கனடாவில் குள்ளமான நபர்களுக்கான உலகத் தடகளப் போட்டியில் முதன்முறையாகத் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் தங்கப் பதக்கங்களை அள்ளி நாடு திரும்பியுள்ளனர். குள்ளமான மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 7-வது முறையாக கனடாவில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 18 பேர் தேர்வாயினர். இதில் தமிழகத்தின்  மூன்று நபர்கள் ஆவர் . மதுரை உசிலம்பட்டியைச்  சேர்ந்த கணேஷ் , மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த மனோஜ் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ், ஆகிய மூவரும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இதில் மதுரையைச் சேர்ந்த கணேஷ் ஈட்டி எரிதல், குண்டு எரிதல், வட்டி எரிதல் ஆகிய மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்று மதுரைக்குப் பெருமை சேர்த்தார். அவருக்கு அவரது கிராமத்தில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள் சென்னை வந்தபோது யாரும் வரவேற்புக்கு அளிக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது .பல ஆண்டுகள் கடுமையான உழைப்பால் பெற்ற இந்த வெற்றிக்கு அரசு அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. நடக்கும் அரசியல் சூழலில் இந்த மாரியப்பன்களைக் கெளரவிக்க அரசு மறந்துவிடக்கூடாது என்பதே மதுரையைச் சார்ந்த சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது . 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement