Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரையில் இளைஞர் ஆணவக் கொலையா? விசாரணை நடத்த ஆட்சியரிடம் கோரிக்கை மனு

மதுரை சுப்ரமணியபுரம் பகுதியில் வசித்த பட்டியலினத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், மாற்று மதப்பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து இரண்டு வருடம் கடந்துவிட்ட நிலையில், மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புவதாகவும், இதைக் காவல்துறை முறையாக விசாரிக்கவேண்டுமென்றும் புரட்சிப் புலிகள் அமைப்பினர் மதுரை ஆட்சியரிடம் இன்று கோரிக்கை வைத்தனர். 

சுப்ரமணியபுரம்


இதுபற்றிக் கூறிய புரட்சிப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ''கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரமணியபுரத்தில் வசிக்கும் கார்த்திக்கும், அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பெண்னும் காதலித்து திருமணம் கொண்டனர். பெண்ணின் உறவினர்களுக்குப் பயந்து திருச்சியில் சில காலம் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் பாட்டியுடன் சேர்ந்துவாழ கார்த்திக் மீண்டும் மதுரைக்கு வந்தார். இங்கே அவர் மனைவியின் உறவினர்கள் மதம் மாறும்படி மிரட்டியுள்ளனர். மகளிர் காவல் நிலையம் மூலமாகவும் கட்டப்பஞ்சாயத்து செய்து பிரித்துவிட முயற்சி செய்துள்ளனர்.

அனைத்து இடைஞ்சல்களையும் மீறி அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி வீட்டில் கட்டிலில் உட்காந்திருந்தநிலையில், தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள். தற்கொலை செய்ததற்கான காயம் கழுத்தில் ஏதுமில்லை. அதனால், இது திட்டமிட்ட கொலைதான். காவல்துறை சந்தேகமரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல்துறையினர் பெண்ணின் உறவினர்களை விசாரிக்கவேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்' என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement