Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதியோர் உதவித் தொகை வாங்கச் சென்ற 2 முதியோர்கள் விபத்தில் பலி

சேலம் மாவட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த இரண்டு வயதான பெண்மணிகள் வங்கியில் உதவித் தொகை வாங்குவதற்காக ரோட்டோரமாக நின்றுகொண்டிருந்தபோது அவர்கள் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். 

 

முனியம்மாள்

தங்கம்மாள்


சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கம்மாள், முனியம்மாள் என்ற இரண்டு வயதான பெண்மணிகள், முதியோர் உதவித் தொகை வாங்க கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்குச் செல்வதற்காக கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ரோட்டு ஓரமாக நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது நாமக்கல்லிலிருந்து சேலத்தை நோக்கி வேகமாக ஒரு லாரி வந்துகொண்டிருந்து. கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வந்ததும் லாரியின் டயர் வெடித்தது.


இதனால் லாரி தன் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமாக நின்றுகொண்டிருந்த தங்கம்மாள், முனியம்மாள் என்ற பாட்டிகளின் மீது ஏறியது. இதில் இரண்டு பாட்டிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இதனால் அக்கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.  
இதுப்பற்றி இறந்து போன தங்கம்மாளின் உறவினர்கள், ''காலையில் எழுந்ததும் குளிச்சிட்டு சாப்பிட்டு பேங்க் போய் பணம் வாங்கிட்டு வந்து செலவுக்குப் பணம் கொடுப்பதாகச் சொல்லிட்டு வந்ததே இப்படி அநியாயமா செத்துப் போயிடுச்சே! லாரிக்காரன் கொஞ்சம் மெதுவா வந்திருக்கக் கூடாதா? '' என்று கதறி அழுதார்கள்.


" பொதுவாக முதியோர் உதவித் தொகை என்பது ஓய்வின் காலகட்டத்தில் கொடுக்கப்படக் கூடிய தொகை இதை நேரடியாக ஊழியர்கள் அவர்கள் வீட்டிற்கு சென்று கொடுக்கப்பட வேண்டும் என்பது சரியானது. ஆனால், வங்கிகள் மூலம் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதால் வயதானவர்கள் வங்கிக்கு பஸ்ஸிலோ, ரோடுகளைக் கடந்தோ செல்ல முடியாத அவல நிலைக்குத் தள்ளப்படுவதோடு வங்கிகளில் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கிறார்கள். வங்கி ஊழியர்களின் உதாசீனத்திற்கும் ஆளாகிறார்கள். அதனால், அரசு இனியாவது முதியோர் உதவித் தொகை அவர்கள் வீடு தேடி கொடுக்க ஏற்பாடு செய்வதே சிறந்து'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement