Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலாகா பறிப்புக்கு இனிப்பு கொடுத்த தொண்டர்கள்! - இது கடலூர் கலாட்டா

அமைச்சர் எம்.சி.சம்பத் கூடுதலாக வகித்து வந்த சுரங்கம் மற்றும் கனிமவளத் துறைகள் பறிக்கப்பட்டதால் பெரும் சந்தோஷத்தில் திளைக்கிறார்கள் கடலூர் மாவட்ட அ.தி.மு.க.வினர்.

எம்.சி. சம்பத்

தமிழகத்தில் அ.தி.மு.க.வில் தினகரன், எடப்பாடி பழனிசாமி அணியைபோல், கடலூரைப் பொறுத்தவரை எம்.பி.அருண்மொழிதேவன், அமைச்சர் எம்.சி.சம்பத் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். எம்.பி.அருண்மொழிதேவன் அணியைச் சேர்ந்த எம்.பி. சந்திரகாசி, எம்எல்ஏ-க்கள் சத்யா, பாண்டியன், முருகுமாறன், கலைச்செல்வன் ஆகியோர்  அமைச்சர் எம்.சி.சம்பத்துக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் தொடர்ந்து கட்சிக் கூட்டங்கள், அரசு விழாக்கள் என அனைத்தையும் புறக்கணித்து வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எம்.சி.சம்பத் மாவட்டச் செயலாளர், அமைச்சர் என்ற போதிலும்கூட, எம்.பி.அருண்மொழிதேவன் அணியில் நான்கு எம்எல்ஏ-க்கள் இருப்பதால் அந்த அணிக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துவந்தார். இது கடந்த வராம் கடலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிலேயே வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது.


இந்நிலையில் இன்று, எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்ததால், புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் கூடுதலாக வகித்து வந்த சுரங்கம் மற்றும் கனிமவளத்துறையைப் பறித்து அமைச்சர் சி.வி.சண்முகத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் குஷியில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். "இது, இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்ததால் நிர்வாக சீர்த்திருத்தத்திற்காக அப்படிக் கொடுக்கப்பட்டதாக வெளியில் சொன்னாலும், உண்மையில் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது அதிருப்தியில் உள்ள எம்.பி-க்களையும், எம்எல்ஏ-க்களையும் திருப்திபடுத்தத்தான் இந்தப் பதவி பறிப்பு. இரட்டையிலைச் சின்னத்தை மீட்டுவிட்டால் கட்டாயம் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிபோகும் என்கிறார்கள்" முதல்வருக்கு நெருக்கமானவர்கள்.
                            

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement