Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது ஆச்சர்யமளிக்கிறது' - யெச்சூரி

மகாராஷ்டிரா மாநிலம், மாலேகானின் கடந்த 2008-ம் ஆண்டு செப்-29-ம் தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பில் 8 பேர் பலியானார்கள். இதன் மீதான விசாரணையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது அபினவ் பாரத் என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இந்த வழக்கில் சாத்வி பிரக்யா, ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், சுதாகர் திவிவேதி என்ற தயானந்த் பாண்டே, ராகேஷ் தவாதே, சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, ஷிவநாராயண் கல்சங்ரா, ஷியாம் சாஹு, மேஜர் ரமேஷ் உபாத்யாயா, அஜய் ரஹிகார் மற்றும் ஜகதீஷ் மத்ரா ஆகியோரை மகாராஷ்டிர மாநில பயங்கரவாத தடுப்பு போலிஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து ஜாமீன் கேட்டும் மறுக்கப்பட்டு வந்த நிலையில்  கடந்த ஏப்ரலில் சாத்வி பிரக்யாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது, பின்னர் மே மாதம் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான முன்னாள் ராணுவ அதிகாரி ஶ்ரீகாந்த் பிரசாத் புரோஹித்கிற்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. 

மாலேகான்

இதற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆச்சர்யம் தெரிவித்துள்ளார். "இன்று புரோஹித் ஜாமீனுக்கு மறுப்பு சொல்லாத தேசியப் பாதுகாப்பு அமைப்புதான் இத்தனை ஆண்டுகளாக அவர் வெளியே போனால் சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்று தெரிவித்தது. இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று  விளக்க வேண்டும். தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவான நிலை ஏற்படத் தொடங்கியுள்ளது ஆச்சர்யமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement