Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழையால் நிரம்பிய ஏரி..பழுதான மதகால் வீணாகும் தண்ணீர் வெளியேறும் அவலம்!.

        


 

"அடிக்கடி பெய்த மழையால் ஏரி நிரம்பிடுச்சு. ஆனால், பழுதான இரண்டு தண்ணீர் வெளியேற்றும் மதகுகளைச் சரிபண்ணாததால்,ஏரியில் நிரம்பிய நீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. அதிகாரிகள் அலட்சியத்தால், ஏரியில் தேங்கிய நீரை விவசாயிகள் பயன்படுத்தமுடியாத நிலைமை உள்ளது" என்று புகார் வாசிக்கிறார்கள் பகுதி மக்கள். 


கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அருகே உள்ள பாப்பக்காப்பட்டியில் இருக்கிறது 190 ஏக்கர் பரப்பளவுள்ள பாப்பக்காப்பட்டி பெரிய ஏரி. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் இரண்டு மதகுகள் மூலம் தண்ணீர் பெற்று மலையாண்டிப்பட்டி, பாப்பக்காப்பட்டி,பாப்பக்காப்பட்டி காலனி பகுதியில் 500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வந்தன. ஆனால், இந்த ஏரி கடைசியாகக் கடந்த 2010 ம் ஆண்டுதான்  நிரம்பியது. அதன்பிறகு, மழையின்மை; வறட்சியால் நிரம்பவில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு வார காலமாக கரூர் மாவட்டத்தில் அவ்வபோது பரவலாக மழை பெய்ய, இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியிருக்கிறது.

இதுவரை, அரை ஏரி அளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. இப்படியே தொடர்ந்து மழை பெய்தால், விரைவில் முழு அளவும் நிரம்ப வாய்ப்புள்ளதாகப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், கடந்த ஆறு வருடங்களாக இந்த ஏரி நிரம்பாததால், இந்த ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க உதவும் இரண்டு மதகுகளும் பழுதடைந்து கிடக்கின்றன. இப்போது, வருணபகவானின் தயவால் இந்த ஏரியில் தண்ணீர் தேங்கி, நீர் மட்டம் உயரத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இரண்டு மதகுகளும் பழுதடைந்து கிடப்பதால்,'அதை சரி பண்ணி தரச் சொல்லி அதிகாரிகள் மனு கொடுத்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்,தேங்கிய தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது" என்று புகார் சொல்கிறார்கள் பகுதி விவசாயிகள்.


 

"இந்த ஏரி தொடர்ந்து வறட்சியிலேயே இருந்ததால், இதனால் பாசனம் பெற்ற 500 நிலங்களும் தரிசாகக் கிடக்கிறது. இப்போது, நிரம்பிய தண்ணீரை வெச்சு விவசாயம் பண்ணலாம்ன்னா, நாங்க விவசாய ஆயத்த பணிகளைச் செய்வதற்குள்ளாகவே ஏரியில் உள்ள தண்ணீர் வீணாக வெளியேறிடும் போலிருக்கு. இதனால்,இரண்டு மதகுகளில் தொடங்கும் வாய்க்கால்களை மணல் மூட்டைகளைப் போட்டு தண்ணீர் வெளியேறாமல் அடைத்திருக்கிறோம். ஆனால், பலத்த மழை பெய்தால், அந்த இரண்டு இடங்களிலும் போடப்பட்ட மணல் மூட்டைகள் மழைநீரில் கரைந்து, மறுபடியும் ஏரித் தண்ணீர் வெளியேறத் தொடங்கிடும். அதனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து இரண்டு மதகுகளையும் சரி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைக்கின்றனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement